பேலியோ டயட் ஆதிமனிதன் உணவுமுறை

பேலியோ டயட் :  குறைமாவுமிகைகொழுப்பு ஆதிமனிதன் உணவுமுறை

The English Version of this article can be found at Chennai Paleo Doctor

-oOo-

மனிதன் உயிர்வாழ தேவை மிக மிக அடிப்படை தேவைகள் இரண்டு தான்
1. சுவாசிக்க பிராணவாயு உள்ள, விஷ வாயுக்கள் இல்லாத காற்று
2. உணவு

இதில்
• தாங்கள் வாழ மற்றும் வளர
• மனிதனும் மிருகங்களும் சாப்பிடும் அல்லது பருகும்
• தாவரங்கள் உள்ளிழுத்துகொள்ளும்
• சத்தான பொருளே
உணவு

ஏன் உணவு தேவை ? 
1. உடலின் வெவ்வேறு பாகங்களை உருவாக்க உணவு தேவை
2. உடலின் வெவ்வேறு இயக்கங்களுக்கு உணவு தேவை

உணவில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் ?
உணவில் ஆறு அம்சங்கள் இருக்க வேண்டும்
1. மாவுச்சத்து என்று தமிழில் அழைக்கப்படும் கார்போஹைடிரைட்
2. கொழுப்புச்சத்து (‘பேட்)
3. புரதச்சத்து (புரோடின்)
4. உயிர்ச்சத்துகள் என்று தமிழில் அழைப்படும் விட்டமின்கள்
5. தாதுக்கள் அல்லது கனிமங்கள் (மினரல்)
6. நீர்

பேலியோ டயட் அல்லது ஆதிமனித உணவு என்றால் என்ன
60 கிலோ எடையுள்ள நபர் தினமும் சாப்பிடும் உணவில், மாவுச்சத்தின் அளவானது 45 கிராமுக்கு குறைவாக இருந்தால் அது பேலியோ டயட் அல்லது ஆதிமனிதன் உணவு எனப்படும்

(உடல் எடையில் கிலோவிற்கு 750 மிலிகிராம். அதாவது 60 கிலோ எடையுள்ளருக்கு 45 கிராம். 100 கிலோ எடையுள்ளவருக்கு 75 கிராம்)

இந்த ஆதிமனிதர் உணவுமுறைக்கும் பிற உணவு முறைகளுக்கும் என்ன வித்தியாசம் ? 

  1. பெரும்பாலான பிற உணவு முறைகளின் உணவின் அனைத்து கூறுகளும் குறைவாக எடுக்கப்படும். ஆதிமனித உணவுமுறையில் மாவுச்சத்து மட்டுமே குறைவாக எடுக்கப்படுகிறது
  2. பெரும்பாலான பிற உணவு முறைகளில் சாப்பிடும் கலோரிகளை கணக்கு பார்த்து சாப்பிட வேண்டும். ஆதிமனித உணவு முறையில் கலோரி கணக்கு கிடையாது

இந்த உணவு முறை அறிவியல் பூர்வமானதா ? 
ஆம் ! இந்த முறை அறிவியல் பூர்வமானது தான் www.paleo4diabetes.com என்ற தளத்தில் இது குறித்த அறிவியல் கட்டுரைகள் உள்ளன. நீங்கள் விரும்பினால் வாசித்து பார்க்கலாம்

இந்த உணவில் எவை எல்லாம் சாப்பிடலாம், எவை எல்லாம் சாப்பிடக்கூடாது ? 
இவை நபருக்கு நபர் மாறுபடும். ஒரே நபருக்கு கூட உணவு முறை ஆரம்பிக்கும் போதும் ஒரு மாதம் கழித்த பிறகும், 6 மாதங்கள் கழித்த பிறகும் இந்த பட்டியல் மாறுபடும். எனவே மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இது குறித்து முடிவு எடுக்க முடியாது.

பொதுவான எவை எல்லாம் சாப்பிடலாம் என்ற விபரங்கள் www.eat-fat-get-thin.com என்ற தளத்தில் உள்ளன. ஆனால் இது பொதுவான தகவல் தானே தவிர, தக்க பரிசோதனை அல்லது ஆலோசனை இல்லாமல் நீங்களாக இந்த உணவு முறையை ஆரம்பிக்க கூடாது

இந்த உணவுமுறையால் ஏற்படும் நன்மைகள் யாவை ? 

  1. நீரழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது
  2. உடல் எடை குறைகிறது
  3. உடல் பருமன் குறைகிறது
  4. பல இயக்குநீர் (ஹார்மோன்) பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன
  5. சில தன்னெதிர்ப்பு நோய்கள் (ஆட்டோ இம்யூன் டிஸ்சார்டர்ஸ்) கட்டுப்படுத்தப்படுகின்றன

அனைவரும் இந்த உணவு முறையை பின்பற்றலாமா ?
இல்லை. கொழுப்பு மற்றும் ஆற்றல் தொடர்பான வளர்சிதை மாற்ற குறைபாடுகள் உள்ளவர்கள் இந்த உணவு முறையை மருத்துவரின் ஆலோசனை மற்றும் பரிந்துரை இல்லாமல் சாப்பிடக்கூடாது

நான் இந்த உணவு முறையை சாப்பிடலாமா இல்லையா என்று எப்படி அறிந்து கொள்வது ? 
மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்

நான் எவையெல்லாம் சாப்பிடலாம், எவையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று எப்படி அறிந்து கொள்வது ? 
மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்