ஆண்மைக்குறைவு, ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை : பேலியோ

ஆண்மைக்குறைவு, ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை : பேலியோ

The English Version of this article can be found at Impotence, Erection Problems, Premature Ejaculations, Sterility : Paleo
-oOo-

 • ஆண்மைக்கான நாளமில்லா சுரப்பி இயக்குநீர் டெஸ்டோஸ்டிரோன்
 • பெண்மைக்கான நாளமில்லா சுரப்பி இயக்குநீர் ஈஸ்டரஜன்

ஆண்மைக்கும், விந்து உற்பத்திக்கும் டெஸ்டொஸ்டிரோன் தேவை. டெஸ்டொஸ்டிரோன் தேவை குறைவாக இருந்தால்

 • ஆண்மைக்குறைவு ஏற்படலாம்.
 • அதே போல் போதிய விந்தணுக்கள் இல்லாமல் அந்த நபருக்கு குழந்தை பேறு ஏற்படாமல் இருக்கலாம்

-oOo-

இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருக்க (Low testosterone in blood) இரு காரணங்கள்

 1. குறைவான உற்பத்தி (decreased synthesis)
 2. அதிகரித்த படிச்சிதைவு (increased degradation)

-oOo-

எனவே டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்து அதன் மூலம் ஏற்படும் ஆண்மைக்குறைவிற்கும், மலட்டுத்தன்மைக்கும் மூன்று விதமாக வைத்தியம் பார்க்கலாம்

 1. உற்பத்தியை அதிகரிக்கலாம்
 2. படிச்சிதைவை குறைக்கலாம்
 3. வெளியில் இருந்து ஊசி மூலம் டெஸ்டோஸ்டிரோனை செலுத்தலாம்

-oOo-

டெஸ்டோஸ்டிரோன் படிச்சிதைவு எப்படி நடக்கிறது ?

உடம்பில் உள்ள கொழுப்பு செல்களில் (adipose tissue) அரோமடைஸ் (aromatase) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோனை ஈஸ்ட்ரஜனாக மாற்றுகிறது

ஆக

ஒருவரின் உடம்பில் கொழுப்பு செல்கள் நிறைய இருந்தால் அவரது இரத்ததில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் அதிக அளவில் ஈஸ்டரஜனாக மாற்றப்படும்

-oOo-

ஈஸ்ட்ரஜனின் பணி என்ன ?
கொழுப்பை அதிகரிப்பது (இன்சுலினும், ஈஸ்ட்ரஜனும் உடம்பில் கொழுப்பு செல்களை அதிகரிக்கும் இயக்குநீர்கள்)

அதாவது ஈஸ்ட்ரஜன் உடலில் அதிகம் கொழுப்பை சேகரிக்கிறது

இந்த அதிகப்படியான கொழுப்பு, இரத்தத்தில் இருக்கும் டெஸ்டோஸ்டிரோனை அதிக அளவில் ஈஸ்டரஜனாக மாற்றுக்கிறது

அப்படி மாற்றப்பட்ட ஈஸ்ட்ரஜன் உடலில் மேலும் அதிகம் கொழுப்பை சேகரிக்கிறது

ஆக

அதிகம் ஈஸ்ட்ரஜன் –> அதிகம் கொழுப்பு –> மேலும் அதிகம் ஈஸ்ட்ரஜன் (குறைவான டெஸ்டோஸ்டிரோன் ) –> மேலும் அதிகம் கொழுப்பு –> அதைவிட அதிகம் ஈஸ்ட்ரஜன் (இரத்தத்தில் டெஸ்டோஸ்டிரோன் மேலும் குறைவு) –> என்று ஒரு நேர்மறை பின்னூட்டம் (positive feedback) நடந்து கொண்டே செல்கிறது
Testosterone Decreases in High Carbohydrate Diet
ஆக

 1. கொழுப்பு அதிகரிக்கிறது
 2. டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது
 3. ஈஸ்ட்ரஜன் அதிகரிக்கிறது

-oOo-

டெஸ்டோஸ்டிரோன் குறைவாதால் ஏற்படும் விளைவுகளை பார்த்து (ஆண்மைக்குறைவு அல்லது மலட்டுத்தன்மை அல்லது இவை இரண்டும்) நோயாளி பயந்து மருத்துவரை பார்த்து டெஸ்டோஸ்டிரோன் ஊசியை போட்டுக்கொள்வார் . . . . அதை தொடர்ந்தும் போட்டுக்கொண்டே இருப்பார் . . .

ஆனால் உள்ளே செல்லும் டெஸ்டோஸ்டிரோன் எல்லாம் சிறிது நேரத்தில் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பினால் ஈஸ்ட்ரஜனாக மாறிவிடும்

எனவே ஊசியின் அளவு அதிகரிக்க வேண்டி வரும்

-oOo-

இதை வேறு விதமாக எப்படி எதிர்கொள்ளலாம்

நாம் முதலில் பார்த்தது போல் (1. உற்பத்தியை அதிகரிக்கலாம் , 2. படிச்சிதைவை குறைக்கலாம் 3. வெளியில் இருந்து ஊசி மூலம் டெஸ்டோஸ்டிரோனை செலுத்தலாம்)

படிச்சிதைவை குறைக்கலாம்

-oOo-

படிச்சிதைவை எப்படி குறைக்க முடியும் ?
உடம்பில் உள்ள கொழுப்பை குறைத்தால் படிச்சிதைவு குறையும்

-oOo-

உடம்பில் உள்ள கொழுப்பை எப்படி குறைப்பது ?
உடலின் இன்சுலின் சுரப்பு குறைந்தால் உடலின் கொழுப்பு குறையும்

-oOo-

உடலின் இன்சுலின் சுரப்பை எப்படி குறைப்பது
சாப்பிடும் உணவில் மாவுச்சத்து (carbohydrate) குறைவு என்றால் உடலின் இன்சுலின் சுரப்பு குறையும்

-oOo-

மாவுச்சத்தினை எப்படி குறைத்து சாப்பிடுவது ?
பேலியோ சாப்பிடுங்கள்

-oOo-

அதாவது

உடலிலுள்ள டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க பேலியோ டயட் அல்லது ஆதிமனிதன் உணவு முறை மிகவும் சிறந்தது

-oOo-

இப்பொழுது உங்களுக்கு சில சந்தேகங்கள் எழலாம்

 • ஆண்மைக்குறைவும் (Impotence) மலட்டுத்தன்மையும் (Sterility) ஒன்றா ???
 • இல்லை என்றால் என்ன வித்தியாசம் ??
 • கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை போய் விடுமா ??

போன்ற கேள்விகளுக்கு ஒரு சிறிய விளக்கம்

-oOo-

ஆண்மை என்று குறிக்கப்படுவது ஒருவர் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிவதை வைத்து. இதை ஆங்கிலத்தில் பொட்டன்சி (Potency) என்று கூறுவார்கள். எனவே ஒருவரால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடிகிறதா இல்லையா என்பதை வைத்து, அவர்

 • ஆண்மை உள்ளவரா – பொட்டண்ட் Potent
 • ஆண்மையற்றவரா – இம்பொட்டண்ட் Impotent

என்று கூறலாம்

-oOo-

அதே போல் ஒருவரால் தந்தையாக முடியுமா இல்லையா என்பதை வைத்து

 • பெர்டிலிட்டி – Fertilily
 • மலட்டுத்தன்மை ஸ்டெரிலிட்டி – Sterilily

என்று பிரிக்கலாம்

-oOo-

இது இரண்டும் தனி தனி அம்சங்கள்

உதாரணமாக
கருப்பு, வெள்ளை என்று இரு நிறங்களையும்
பேனா, பென்சில் என்று இரு பொருட்களையும் வைத்துக்கொண்டால்

 • கருப்பு பேனா
 • வெள்ளை பேனா
 • கருப்பு பென்சில்
 • வெள்ளை பென்சில்

என்று நான்கு சாத்தியக்கூறுகள் உள்ளதை போல்

ஆண்மை, ஆண்மையின்மை, மலடு, மலடில்லை என்று பார்த்தால்

 • ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம். Potent and Fertile
 • ஆண்மை குறைவு, தந்தையாகலாம். Impotent and Fertile
 • ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது. Potent, but sterile
 • ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது. Impotent, Sterile

என்று நான்கு பிரிவுகள் வரும்

-oOo-

ஆண்மையுள்ளவர், தந்தையாகலாம்

 • இதில் தான் பெரும்பாண்மையானவர்கள் உள்ளார்கள் என்பதால் இது குறித்து பெரிதாக விளக்கம் தேவை யில்லை என்று நினைக்கிறேன்

ஆண்மை குறைவு, தந்தையாகலாம்

 • இதிலும் பலர் உள்ளனர். இந்த ஆண்மைக்குறைவு என்பது பெரிய தலைப்பு என்பதால் (வாசகர்களின் ஆதரவு இருந்தால்) சில இடுகைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்.
 • இந்த பகுப்பில் இருப்பவர்களாம் தாம்பத்திய உறவில் ஈட்பட முடியாமை, சிரமம் ஆகியவை இருக்கும்
 • இதற்கு தகுந்த சிகிச்சை எடுத்தால் போதும்
 • இதில் பெரும்பாண்மையான நோய்களுக்கு பூரண குணமடையும் சிகிச்சை உள்ளது.

ஆண்மையுள்ளவர், தந்தையாகமுடியாது

 • இது தான் மிக முக்கியமான் விஷயம். இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்ற விபரமே நாட்டில் பலருக்கும் தெரியாது.
 • இவர்கள் தங்களிடம் குறை உள்ளது என்று தெரியாமல் இரண்டு, மூன்று என்று திருமணம் செய்து கொண்டே போவர்கள்
 • இந்த நிலைக்கு பல காரணங்கள்
 • இதில் சில நோய்களுக்கு சிகிச்சை உண்டு. சில நோயக்ளுக்கு கிடையாது

முக்கிய குறிப்பு : கர்ப்பத்தடை செய்து கொள்பவர்கள் இந்த வகையில் சேருவார்கள். கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் ஆண்மை குறையாது

ஆண்மை குறைவு, தந்தையாகமுடியாது

இது பல காரணங்களினால் வரும் .
அனைத்தும் மருத்துவ பெயர்கள் என்பதால் உங்களை குழப்ப விரும்பவில்லை

7 thoughts on “ஆண்மைக்குறைவு, ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை : பேலியோ”

 1. அருமை… பயனுள்ள பதிவு… தொடரட்டும் தங்கள் பணி.

 2. Dear sir potent but sterile விந்தணு , வேறு மருத்துவம் இறுக்கிறதா நிறைய மருத்தவம் பார்த்துவிட்டார் நண்பர் ஒருவர்.

 3. விந்தணு அறவே இல்லை குணப்படுத்த முடியமா டாக்டர் சார்

 4. மிகவும் பயனுள்ள கட்டுரை டாக்டர்… தொடரட்டும் தங்கள் பணி…

Comments are closed.