உடல் பருமன் : காரணங்கள் மற்றும் தீர்வுகள்

உடல் பருமன் : காரணங்கள் மற்றும் தீர்வுகள்.

The English Version of this article can be found at Causes and Natural Treatment of Obesity and Overweight
-oOo-
உடல் பருமன் என்பது நான்கு காரணங்களினால் வரலாம்

1. பிறவியலமைந்த இன்சுலின் எதிர்ப்பு (Genetic Insulin Resistance)
2. வேலை செய்யாமல் சோபாவில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி அல்லது முகநூல் பார்ப்பது (Sedantary Life Style)
3. கொழுப்பு தொடர்பான நோய்கள் (Dyslipidaemias)
4. அதிக கலோரி உண்பது : இதை “போசனபிரியம்” என்று தூய தமிழிலும், “கண்டதையும் சாப்பிடுவது” என்று செல்லமாகவும் அழைக்கலாம்

-oOo-

இதில்

உங்கள் உடல் பருமன் வேலை செய்யாமல் சோபாவில் படுத்துக்கொண்டு தொலைக்காட்சி அல்லது முகநூல் பார்ப்பதால் வந்தது என்றால் நீங்கள் தினமும் நடைபயிற்சி, ஓடுவது, பளுதூக்குவது என்று வேலை செய்வதன் மூலம் எடை குறையும்
உங்கள் உடல் பருமன் அதிக கலோரி உண்பதால் வந்தது என்றால் நீங்கள் அரை வயிறு சாப்பிட்டல் எடை குறையும்
உங்கள் உடல் பருமன் கொழுப்பு தொடர்பான நோய்கள் மூலம் வந்தது என்றால் அதற்குரிய சிசிச்சை எடுக்க வேண்டும்

ஆனால்

உங்கள் உடல் பருமன் பிறவியலமைந்த இன்சுலின் எதிர்ப்பு மூலம் வந்தது என்றால், அதற்கு ஒரே வைத்தியம் மாவுச்சத்தை குறைத்து சாப்பிடுவது தான்.. நீங்கள் ஓடு எந்திரத்தில் (டிரெட்மில்லில்) எவ்வளவு ஓடினாலும், எவ்வளவு குறைவாக சாப்பிட்டாலும் பலன் இருக்காது . . . .

-oOo-

Causes of Obesity and Solutions

-oOo-

ஒரு அறிவாளி சாலையில் எதையோ தேடிக்கொண்டிருந்தாராம்
அந்த வழியே வந்த ஒருவர் “என்ன தேடுகிறீர்கள்” என்று கேட்டாராம்
அதற்கு நமது அறிவாளி “நூறு ரூபாய் விழுந்து விட்டது, தேடுகிறேன்” என்றாராம்
வழிப்போக்கர் “எங்கே விழுந்தது” என்றாராம்
நமது அறிவாளி “வீட்டில் விழுந்தது” என்றாராம்
வழிப்போக்கர் “வீட்டில் கீழே விழுந்த நூறு ரூபாயை ஏன் சாலையில் தேடுகிறீர்கள்” என்றாராம்
அறிவாளி சொன்னாராம் “இங்கு தானே வெளிச்சம் உள்ளது” என்று

-oOo-

பிறவியலமைந்த இன்சுலின் எதிர்ப்பினால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் அதிக உடல் எடையை
உடற்பயிற்சி மூலமோ, அல்லது கலோரிகள் குறைப்பது மூலமோ மட்டும் சரி செய்யாலாம் என்று
நினைக்கும் அறிவாளிகளுக்கு பணிந்து சமர்ப்பிக்கப்படுகிறது

10 thoughts on “உடல் பருமன் : காரணங்கள் மற்றும் தீர்வுகள்”

 1. 60% population will need the important essay about the obicity…..Now only we know the reason as four types… Thank you Doctor

  1. நேரில் ஆலோசனை பெற

   அனைத்து தினங்களிலும், வார இறுதி உட்பட, நேரில் ஆலோசனை பெற முன்பதிவு அவசியம்
   காலை 7-8, மாலை 6-9 PM : பிரைம் இந்தியன் மருத்துவமனை, 1051, (பழைய எண்-506) பெரியார் சாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை), அமராவதி நகர், அரும்பாக்கம், சென்னை – 600106. முன்பதிவு : 044 23639999, 9884493140 அல்லது Practo தளம் / App https://www.practo.com/chennai/doctor/dr-j-mariano-anto-bruno-mascarenhas-neurosurgeon மூலமும் முன்பதிவு செய்யலாம்
   -oOo-
   மாலை 4-5 : ஜிஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, 21, டாக்டர்.திருமூர்த்தி நகர், நுங்கம்பாக்கம், சென்னை – 600034. முன்பதிவு : 044 28222288

 2. Sir, as per above 4 types of Obesity.
  Shall we find which type through blood test.
  Kindly explain.

Comments are closed.