குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?

குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?

The English Version of this article can be found at Will Low Carb High Fat Diet Increase Blood Urea Levels and Cause Kidney Failure ?

-oOo-

 • குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட ஆரம்பித்து சில வாரங்கள் கழித்து இரத்த பரிசோதனை செய்யும் போது முன்னர் இரத்தத்தில் யூரியா இருந்த அளவை விட சில புள்ளிகள் அதிகரித்திருப்பதை காணலாம்.
 • சிறுநீரக பிரச்சனையில் (கிட்னி பெயிலியர்) இரத்தத்தில் யூரியா அதிகரிக்கும் என்ற தகவல் அறிந்த பலரும், குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டவுடன் சிறுநீரகங்கள் செயலிழக்கின்றன என்ற தவறான புரிதலுக்கு வந்து விடுகிறார்கள்.

சிறுநீரகங்கள் செயலிழந்தால் இரத்தத்தில் யூரியா அதிகரிக்கும்
ஆனால்
இரத்தத்தில் யூரியா அதிகம் என்றால் அதற்கு ஒரே காரணம் சிறுநீரக செயலிழப்பு மட்டும் அல்ல

இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

-oOo-

குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?
குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?
 • உணவில் இருக்கும் புரதம் உடைக்கப்பட்டு அது யூரியாவாக மாறுகிறது
 • இரத்தத்தில் யூரியா அளவு அதிகரித்தால் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும் . மூளை வேலை செய்யாது. இதை யூரிமிக்  என்கபலோபதி என்பார்கள்
  எனவே
 • இந்த யூரியாவை வெளியேற்ற வேண்டும்.
 • அதற்கு உடலில் உள்ள உறுப்பு(கள்) சிறுநீரகம் (ங்கள்).

-oOo-

ஒரு அணையை கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அதில் நீர் வருகிறது.
அதே போல் நீர் வெளியேறுகிறது.

-oOo-

உள்ளே வரும் நீரை , உடலில் உற்பத்தியாகும் யூரியாவுடன் ஒப்பிடுங்கள்.
வெளியேறும் நீரை, சிறுநீரகத்தால் வெளியேற்றப்படும் யூரியாவுடன் ஒப்பிடுங்கள்.

-oOo-

அணையில் நீர் அளவு எப்பொழுது அதிகரிக்கும் ?

 1. அதிகம் நீர் வந்தால்.
 2. குறைவான நீர் வெளியேறினால்.

-oOo-

இரத்தத்தில் யுரியா அளவு எப்பொழுது அதிகரிக்கும்

 1. அதிகம் யுரியா உற்பத்தி செய்யப்பட்டால்
 2. குறைந்த யுரியா வெளியேறினால்

-oOo-

அதிகம் யுரியா உற்பத்தி செய்யப்படுவது எப்பொழுது
அதிகம் புரதம் உட்கொண்டால்

குறைந்த யுரியா வெளியேறுவது எப்பொழுது
சிறுநீரக செயல்பாடு குறைந்தால்

-oOo-

இரத்தத்தில் யூரியா அளவு எப்பொழுது அதிகரிக்கும்

 1. அதிகம் புரதம் உட்கொண்டால்
 2. சிறுநீரக செயல்பாடு குறைந்தால்

இது தவிர கீழ்க்கண்ட காரணங்களினாலும் இரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும்

 1. நீர்ச்சத்து குறைபாடு Salt and Water Depletion
 2. வாந்தி Vomiting
 3. பேதி Diarrhea
 4. இரத்த வாந்தி Haemetemesis
 5. இரத்தப்போக்கு Hemorrhage
 6. பெருங்குடல் அழற்சி Ulcerative Colitis
 7. அடிசன்ஸ் நோய் Addison’s disease
 8. கடிய முடிச்சச்சிறுநீரகவழற்சி Acute Glomerulonephritis
 9. இரண்டாம் வகை சிறுநீரகவழற்சி Type II Nephritis
 10. சிறுநீரகக்கடினம் Malignant Nephrosclerosis
 11. சிறுநீரக சீழ் Pyelonephritis
 12. பாதரச நச்சேற்றம் Mercury Poisoning
 13. சிறுநீரக நீர்க் கோர்வை Hydronephrosis
 14. சிறுநீரக காசநோய் Renal Tuberculosis
 15. சிறுநீரக கல் Renal Calculi
 16. சுக்கிலவகம் பெருத்தல் Prostate enlargement
 17. சிறுநீர் வழிப்பாதை புற்றுநோய்கள் Tumours of Urinary Tract

-oOo-

எனவே
இந்த உணவு முறையில் புரதம் மட்டுமே அதிக அளவு உட்கொள்வதால் கிட்னிக்கு பிரச்சனை வராது
ஆனால்
ஏற்கனவே பிரச்சனை உள்ள கிட்னியால் இந்த அதிக அளவு யூரியாவை வெளியேற்ற முடியாவிட்டால்,  யூரியா அளவு இரத்தத்தில் அதிகரித்து அதனால் மூளைநலிவு (uremic encephalopathy) ஏற்பட்டு மூளைசெயல்பாடும் பாதிக்கப்படலாம்

-oOo-

அப்படி என்றால் என்ன உணவு உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு வரும் ?
மாவுச்சத்து அதிகம் உட்கொண்டால் சிறுநீரக பாதிப்பு வரும்.

-oOo-

சிறுநீரக பாதிப்பு இல்லாதவர்கள், வருங்கால சிறுநீரக பாதிப்பை தவிர்க்க உட்கொள்ள வேண்டிய உணவு எது ?
குறைமாவு நிறைகொழுப்பு உணவு.

-oOo-

ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால்
அதிக மாவுச்சத்து சாப்பிட்டு சிறுநீரகங்கள் கெட்டு போவதற்கு முன்னர் குறைமாவுநிறைகொழுப்பு உணவை சாப்பிட்டு உங்கள் சிறுநீரகங்களை பாதுகாக்கவும்

இதற்கு ஆதாரம் உள்ளதா ?
ஆம் ! உள்ளது 🙂

 1. Comparative effects of low-carbohydrate high-protein versus low-fat diets on the kidney by Friedman AN, Ogden LG, Foster GD, Klein S, Stein R, Miller B, Hill JO, Brill C, Bailer B, Rosenbaum DR, Wyatt HRin Clin J Am Soc Nephrol. 2012 Jul;7(7):1103-11. doi: 10.2215/CJN.11741111. Epub 2012 May 31. who conclude that In healthy obese individuals, a low-carbohydrate high-protein weight-loss diet over 2 years was not associated with noticeably harmful effects on GFR, albuminuria, or fluid and electrolyte balance compared with a low-fat diet. Further follow-up is needed to determine even longer-term effects on kidney function.
 2. A low-carbohydrate diet may prevent end-stage renal failure in type 2 diabetes. A case report by Jørgen Vesti Nielsen,  Per Westerlund, and Per Bygren in Nutr Metab (Lond). 2006; 3: 23. Published online 2006 Jun 14. doi: 10.1186/1743-7075-3-23 PMCID: PMC1523335 state that An obese patient with type 2 diabetes whose diet was changed from the recommended high-carbohydrate, low-fat type to a low-carbohydrate diet showed a significant reduction in bodyweight, improved glycemic control and a reversal of a six year long decline of renal function. The reversal of the renal function was likely caused by both improved glycemic control and elimination of the patient’s obesity. Insulin treatment in type 2 diabetes patients usually leads to weight increase which may cause further injury to the kidney. Although other unknown metabolic mechanisms cannot be excluded, it is likely that the obesity caused by the combination of high-carbohydrate diet and insulin in this case contributed to the patient’s deteriorating kidney function. In such patients, where control of bodyweight and hyperglycemia is vital, a trial with a low-carbohydrate diet may be appropriate to avoid the risk of adding obesity-associated renal failure to already failing kidneys.
 3. Reversal of Diabetic Nephropathy by a Ketogenic Diet by Michal M. Poplawski, Jason W. Mastaitis, Fumiko Isoda, Fabrizio Grosjean, Feng Zheng, Charles V. Mobbs Published on April 20, 2011 in http://dx.doi.org/10.1371/journal.pone.0018604 conclude Intensive insulin therapy and protein restriction delay the development of nephropathy in a variety of conditions, but few interventions are known to reverse nephropathy. Having recently observed that the ketone 3-beta-hydroxybutyric acid (3-OHB) reduces molecular responses to glucose, we hypothesized that a ketogenic diet, which produces prolonged elevation of 3-OHB, may reverse pathological processes caused by diabetes. To address this hypothesis, we assessed if prolonged maintenance on a ketogenic diet would reverse nephropathy produced by diabetes. In mouse models for both Type 1 (Akita) and Type 2 (db/db) diabetes, diabetic nephropathy (as indicated by albuminuria) was allowed to develop, then half the mice were switched to a ketogenic diet. After 8 weeks on the diet, mice were sacrificed to assess gene expression and histology. Diabetic nephropathy, as indicated by albumin/creatinine ratios as well as expression of stress-induced genes, was completely reversed by 2 months maintenance on a ketogenic diet. However, histological evidence of nephropathy was only partly reversed. These studies demonstrate that diabetic nephropathy can be reversed by a relatively simple dietary intervention. Whether reduced glucose metabolism mediates the protective effects of the ketogenic diet remains to be determined.

சந்தேகங்களை கேட்கலாம்

-oOo-

மருத்துவ சஞ்சிகைகளை தந்து உதவிய மரு.அருண்குமார், M.B., B.S., M.D., (Paediatrics) KMCH ஈரோடு அவர்களுக்கு நன்றிகள் பல

4 thoughts on “குறைமாவு நிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் யூரியா கூடி சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுமா ?”

 1. மிகச்சிறந்த
  ஆய்வு
  விளக்கம்
  நன்றிகள்

  -முல்லைவேந்தன்பெரியார்-

Comments are closed.