பேலியோவால் இன்சுலின் சுரப்பது குறைவதால் பாதிப்புகள் ஏற்படுமா

பேலியோவால் இன்சுலின் சுரப்பது குறைவதால் பாதிப்புகள் ஏற்படுமா

The English Version of this article can be found at Reduced Insulin Secretion in Paleo Diet : Complications ?
-oOo-

குறைமாவுநிறைகொழுப்பு ஆதிமனித உணவு முறை (பேலியோ டயட்) குறித்த விவாதங்களின் போதும், உரையாடல்களின் போதும் இன்சுலின் குறித்த சில கேள்விகள் வெவ்வேறு வடிவங்களில் பல முறை கேட்கப்படுகின்றன. இன்சுலின் என்பது ஒரு முக்கியமான இயக்குநீர் (ஹார்மோன்) அல்லவா ? குறைமாவுநிறைகொழுப்பு உணவு சாப்பிட்டால் இன்சுலின் சுரப்பது குறையும் அல்லவா ? இதனால் பாதிப்புகள் ஏற்படுமே ? இப்படியாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் வருங்காலத்தின் கணையம் இன்சுலின் சுரப்பதை மறக்க வாய்ப்புள்ளதா ?

எனவே, இது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்

-oOo-

இன்சுலின் என்பது ஒரு நாளமில்லா சுரப்பி இயக்குநீர் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். இந்த இயக்குநீரானது கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் உருவாகிறது. அங்கிருந்து நேரடியாக இரத்தத்தில் கலந்துவிடுகிறது.
இந்த இன்சுலின் கீழ்க்கண்ட பணிகளை செய்கிறது

 1. செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை அதிகரிக்கிறது (Increases Glucose Uptake) சில வகை செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதற்கு இன்சுலின் தேவையில்லை. இது குறித்து விரிவாக பிறகு பார்க்கலாம். எனவே இரத்தித்தில் போதுமான அளவு இன்சுலின் இல்லை என்றால் குளுக்கோஸ் செல்களுக்குள் செல்லாமல் இரத்தத்திலேயே இருக்கும். இப்படி இரத்தத்தில் அதிகப்படியாக இருக்கும் குளுக்கோஸ் தான் பல வித நோய்களுக்கும் காரணம். இது குறித்தும் பிறகு விரிவாக பார்க்கலாம்
 2. குளுக்கோஸ் உடைவதை அதிகரிக்கிறது Increases Glycolysis
 3. பைருவேட் அசிடைல் கோ ஏ ஆக மாறுவதை அதிகரிக்கிறது  Increases conversion of Pyruvate to Acetyl CoA
 4. கைகோஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது Increases Glycogenesis
 5. கைகோஜன் உடைபடுவதை குறைக்கிறது Decreases Glycogenolysis
 6. பிற பொருட்களில் இருந்து குளுக்கோஸ் உற்பத்தியாவதை குறைக்கிறது Decreases Gluconeogenesis
 7. HMP Shunt பாதையை அதிகரிக்கிறது
 8. கொழுப்பு உடைபடுவதை குறைக்கிறது Decrease Lipolysis
 9. கொழுப்பமிழங்கள் உற்பத்தியாவதை அதிகரிக்கிறது Increase Fatty Acid Synthesis
 10. டரைகிளைசரைட் கொழுப்பு அதிகம் உற்பத்தியாகிறது Increases TG Synthesis
 11. கீட்டோஜெனெசிசை குறைக்கிறது Decreases Ketogenesis
 12. அமிலோ அமிலங்கள் செல்களுக்குள் செல்வதை அதிகரிக்கிறது  Increase AA uptake
 13. வளர்ச்சி இயக்குநீரின் புரத உயிர்ப்பொருள் கூட்டமைப்பை அதிகரிக்கிறது Protein Anabolic Effect of Growth Hormone (permissive effect)
 14. புரதம் அதிகம் உருவாவதை அதிகரிக்கிறது Increases protein Synthesis
 15. ரிமோசோம்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது Regulation of Ribosomal Translation
 16. இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவை குறைக்கிறது Decrease in K and P in Blood
 17. செல்கள் வளர்வதை ஊக்குவிக்கிறது. செல்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை ஊக்குவிக்கிறது  Growth and Cell Replication
  Stimulates

-oOo-

இந்த நீண்ட நெடும் பட்டியலில் இருந்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது
இன்சுலினனின் வேலை என்பது இரத்தத்தில் குளுக்கோசை குறைப்பது மட்டும் அல்ல என்று தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா.
இன்சுலினின் முதன்மை நோக்கம் உயிர்ப்பொருள் கூட்டமைப்பு (Anabolism) தான்
இன்சுலினின் ஒரு பக்க விளைவு தான் இரத்தத்தில் குளுக்கோசின் அளவை குறைப்பது. அது முதன்மை விளைவு கிடையாது

சொல்லப்போனால்

 • இரத்தத்தில் குளுக்கோசை குறைக்கும் இயக்குநீர்கள் (hormones) மிகக்குறைவே
 • இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்கள் தான் உடலில் அதிகம்

ஏன், ஏனென்றால்

 • நமது உடல் மாவு சத்து சாப்பிட ஏதுவானது அல்ல
 • நமது உடல் புரதம் மற்றும் கொழுப்பு சத்து உண்ண ஏதுவானது
 • இதனால் தான் இன்சுலின் என்ற ஒற்றை இயக்குநீரின் பிரச்சனை மிகப்பெரிய நோயாகிறது 
 • அதே நேரம் இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்களில் ஏதாவது ஒன்றில் பிரச்சனை என்றால் பிற இயக்குநீர்கள் அந்த வேலையை செய்து விடுகின்றன

மனிதனின் பரிணாம வளர்ச்சியில், நாம் மாவுச்சத்து உண்பது மிகவும் சமீபத்தில் தான்

 • அதாவது விவசாயம் வந்த பிறகு தான்
 • அதாவது கடந்த 2000 வருடங்களாகத்தான்

-oOo-

இப்படி மாவுச்சத்து உண்ணும் போது என்ன ஆகிறது

 • இரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது
 • குளுக்கோசை குறைக்க வல்ல ஒரே இயக்குநீர் இன்சுலின் என்பதால் இன்சுலின் மட்டுமே செயல்பவ வேண்டிய நிலை வருகிறது
 • எனவே, அதை குறைக்க இன்சுலின் சுரப்பு அதிகரிக்கிறது

இப்படியே தினமும் அதிகப்படியாக இன்சுலின் சுரந்தால் என்ன ஆகும்

-oOo-

ஒரு ஊர் உள்ளது
அங்கு ஒரு குளம் உள்ளது

அந்த ஊரில் உள்ள 50 குடும்பங்களுக்கும் போதுமான நீர் அந்த குளத்தில் இருந்து கிடைக்கும்

அந்த ஊருக்கும் ஒரு கோலா கம்பெனி வந்து போர் போட்டு நீர் எடுத்தால் என்ன ஆகும்

குளம் வற்றி விடும்

-oOo-

அதே போல், நாம் மாவுச்சத்து சாப்பிடும் போது

 • நிறைய இன்சுலின் தேவைப்படுகிறது
 • நிறைய இன்சுலின் சுரக்கிறது
 • கொஞ்ச நாட்களில் கணையத்தில் இருக்கும் சுரக்கும் சக்தி குறைந்து விடுகிறது
 • அப்படி குறையும் போது, முதலில் கணையத்தின் சுரக்கும் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் சாப்பபிடுகிறார்கள்

பிறகு

 • அதுவும் செல்லுபடியாகாமல் வெளியில் இருந்து இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை வருகிறது

-oOo-

குளம் வற்றினால், லாரியில் நீர் கொண்டு வர வேண்டுமே, அது போல்

-oOo-

நாம் மாவுச்சத்து சாப்பிடாவிட்டால்
நமக்கு தேவையான இன்சுலின் அளவு குறைவே
எனவே
கணையம் களைப்படையாமல் செயல்படுகிறது

-oOo-

ஒவ்வொரு ஊரின் குளமும் வெவ்வேறாக இருக்கும்

 • சில ஊர் குளங்களில் இருந்து 50 குடும்பங்களுக்கு மட்டுமே நீர் எடுக்க முடியும்
 • சில குளங்களில் இருந்து 100 குடும்பங்களுக்கு கூட எடுக்கலாம்
 • சில குளங்களில் ஊற்று நன்றாக இருந்தால் கோலா கம்பெனிக்கு கூட நீர் எடுக்கலாம்

-oOo-

ஒவ்வொருவருக்கும் கணையத்தின் செயல்பாடு மாறுபடும்

 • சிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டாலே, அவர்களின் கணையத்தால் ஈடு கொடுக்க முடியாது
 • சிலர் சிறிது மாவுச்சத்து சாப்பிட்டால், அவர்களின் கணையம் சமாளிக்கும், அதிகம் சாப்பிட்டால் மட்டுமே பிரச்சனை
 • சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும், அவர்களின் கணையம் சுரந்து கொண்டே இருக்கும்

-oOo-

இதில்

 • முதல் வகை தான் நீரிழிவு நோய். சரியாக சொல்லவேண்டுமென்றால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 DM)
 • இரண்டாவது வகை நிரிழிவிற்கு முன் நிலை. அதாவது Pre Diabetes or Impaired Glucose Tolerance என்கிறோம்
 • மூன்றாவது வகையினர் எவ்வளவு மாவுச்சத்து சாப்பிட்டாலும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் நீரிழிவு நோய் வருவதில்லை

-oOo-

நீரிழிவு நோய் நிலைகள்
நீரிழிவு நோய் நிலைகள்

அப்படி என்றால் முதலாம் வகை நீரிழிவு நோய் என்றால் என்ன

 • குளத்தில் நீரை அதிகப்படியாக எடுத்து விட்டால் நீர் வற்றி விடும்
  இது இரண்டாம் வகை நீரிழிவு நோய் Type 2 DM
 • ஒரு போர் நடந்து, நம்நாட்டு வீரர்களும், எதிர் நாட்டு வீரர்களும் குளத்தில் இருந்து சண்டை போட்டால், அதன் பிறகு குளத்தில் நீரை எடுக்க முடியாதல்லவா.  இது முதல் வகை நீரிழிவு நோய் Type 1 DM

அவ்வளவு தான் !

33 thoughts on “பேலியோவால் இன்சுலின் சுரப்பது குறைவதால் பாதிப்புகள் ஏற்படுமா”

 1. ஐயா,

  தங்கள் பதிவு எனக்கு ஒரு புதிய உணர்தலை கொடுத்துள்ளது! நன்றி!

  மு. இராஜேந்திரன்

 2. Dr. I am following your articles on Paleo. Very informative and useful. This article is nice.

  1. my husband taking lonozep 0.25, lithosun 300, quitipin SR 300 otherwise no problem, shall we start this diet

 3. i red the above article , very use full to me . Can you inform the vitamins / minerals to be taken in regular days please.
  s.krishnamoorthy.

 4. இறைக்காத கேணி ஊறுமா??? அனைத்து சத்துக்களும், அனைத்து வகையான உணவுகளும், அதாவது சரிவிகித உணவு என்பது தேவையற்றதா??? மாவுச்சத்து கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்ள பரிந்துரைப்பது தவறில்லை, தவிர்க்கச் சொல்வது தவறில்லையா??? விலங்குகள் எதுவும் மாவுச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்பதில்லையா??? மாற்றம் எதுவாயினும், ஒரே நாளில் என்பதை எந்த உடலோ, உயிரோ அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளுமா??? இன்சுலின் தேவை பலவற்றிற்க்கும் இருக்கும் பொழுது, ஒரே காரணத்தைச் சொல்லி, அதற்கு இன்சுலின் தேவை குறைவு எனச் சொல்வது சரியா??? கேள்விகள் ஆயிரம் இருக்கும் பொழுது, அதிலே திருத்தம் அவசியம்.

  1. ஆதி மனிதனின் மொழி காட்டுமிராண்டி மொழி, ஆதி மனிதனின் நாகரிகம் காட்டுமிராண்டி நாகரிகம், ஆதி மனிதனின் பழக்கவழக்கங்கள் காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள், அவனது உணவு முறை மட்டும் கற்காலத்தது, காட்டுமிராண்டித்தனமானதுவல்லாமல், தற்காலத்துக்கு ஏற்றது என்கிறீர்கள். வாழ்க பகுத்தறிவு… ????
   குற்றம் குறை கூறிட மட்டும் இதை கூறவில்லை, சிந்திக்கவும், தவறேதும் உங்கள் அறிவுக்கு எட்டுமேயானால் திருத்திக் கொள்ளவும் தான். எதையும் ஆராய்ந்துணர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

   1. //ஆதி மனிதனின் மொழி காட்டுமிராண்டி மொழி, ஆதி மனிதனின் நாகரிகம் காட்டுமிராண்டி நாகரிகம், ஆதி மனிதனின் பழக்கவழக்கங்கள் காட்டுமிராண்டி பழக்கவழக்கங்கள், அவனது உணவு முறை மட்டும் கற்காலத்தது, காட்டுமிராண்டித்தனமானதுவல்லாமல், தற்காலத்துக்கு ஏற்றது என்கிறீர்கள். வாழ்க பகுத்தறிவு…//

    Please learn to post to the topic here instead of writing rhetoric

    //குற்றம் குறை கூறிட மட்டும் இதை கூறவில்லை, சிந்திக்கவும், தவறேதும் உங்கள் அறிவுக்கு எட்டுமேயானால் திருத்திக் கொள்ளவும் தான். எதையும் ஆராய்ந்துணர்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.//
    I have explained here
    If you find anything wrong, please mention that
    Don’t waste time writing rubbish

    1. Thanx for accepting that my comment is rhetoric.
     //Don’t waste time writing rubbish//
     What’s rubbish in this???
     If everything explained clearly, then there is no need for this column. Try to answer with minimum decency. Or else, post in ur own wall & practice.

     1. //Thanx for accepting that my comment is rhetoric.//
      What you have written is rhetoric

      //What’s rubbish in this???//
      I have explained it very clearly
      If you don’t understand read it ten to twenty times till you understand

      //If everything explained clearly, then there is no need for this column. Try to answer with minimum decency. //
      I have answered with maximum decency

      //Or else, post in ur own wall & practice.//
      This is my site only

  2. //இறைக்காத கேணி ஊறுமா???//
   At the same time
   When too much of water is taken, the well will dry up
   Simple

   //அனைத்து சத்துக்களும், அனைத்து வகையான உணவுகளும், அதாவது சரிவிகித உணவு என்பது தேவையற்றதா??? //
   A balanced diet for a person with more insulin receptors in adipose tissue is different from the balanced diet for one with less receptors

   //மாவுச்சத்து கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்ள பரிந்துரைப்பது தவறில்லை, தவிர்க்கச் சொல்வது தவறில்லையா??? //
   Where have to advised to avoid Carbohydrates
   Please specify

   //விலங்குகள் எதுவும் மாவுச்சத்து கொண்ட உணவு வகைகளை உண்பதில்லையா???//
   They do intake . . .
   Who said no

   //மாற்றம் எதுவாயினும், ஒரே நாளில் என்பதை எந்த உடலோ, உயிரோ அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளுமா???//
   Don’t drink water for 24 hours and check this yourself

   //இன்சுலின் தேவை பலவற்றிற்க்கும் இருக்கும் பொழுது, ஒரே காரணத்தைச் சொல்லி, அதற்கு இன்சுலின் தேவை குறைவு எனச் சொல்வது சரியா???//
   Already explained
   Please read till you understand

   //கேள்விகள் ஆயிரம் இருக்கும் பொழுது, அதிலே திருத்தம் அவசியம்.//
   Please ask questions
   Will explain

   1. சுக்கு மிளகு திப்பிலியை
    சுக்குமி ளகுதி ப்பிலி என்று பிரித்து பதில் கூறினால் என்ன பதில் சொல்வது???

    குளத்தோடு ஒப்பிட்டு கூறியதால் கேணியோடு ஒப்பிட்டு கூறினேன். சுரப்பி குளமா, ஊற்றா??? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

    /இன்சுலின் தேவை பலவற்றிற்க்கும் இருக்கும் பொழுது, ஒரே காரணத்தைச் சொல்லி, அதற்கு இன்சுலின் தேவை குறைவு எனச் சொல்வது சரியா???//
    //Already explained
    Please read till you understand//

    Where r it’s explained???

    1. //சுக்கு மிளகு திப்பிலியை
     சுக்குமி ளகுதி ப்பிலி என்று பிரித்து பதில் கூறினால் என்ன பதில் சொல்வது???//
     yet another rubbish comment

     //குளத்தோடு ஒப்பிட்டு கூறியதால் கேணியோடு ஒப்பிட்டு கூறினேன். சுரப்பி குளமா, ஊற்றா??? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.//
     It is a metaphor
     Even the “springest” of springs will dry if there is a borewell with 24x7x365 water pump in that

    2. //Thanx for accepting that my comment is rhetoric.//
     What you have written is rhetoric

     //What’s rubbish in this???//
     I have explained it very clearly
     If you don’t understand read it ten to twenty times till you understand

     //If everything explained clearly, then there is no need for this column. Try to answer with minimum decency. //
     I have answered with maximum decency

     //Or else, post in ur own wall & practice.//
     This is my site only

     Yes, it’s ur site, but posted in public…
     If u explained everything clearly, then what’s the need for comments column & why u r asking readers to ask questions????

     1. //Yes, it’s ur site, but posted in public…//
      YES
      It is there for educating people

      //If u explained everything clearly, then what’s the need for comments column & why u r asking readers to ask questions????//
      After reading this, those with intelligence would want to learn more
      That is the need for comments column

      I am asking the readers to ask question is because the wise people will ask questions to improve their knowledge and learn more about this topic

   2. //மாவுச்சத்து கொண்ட உணவுகளை குறைத்துக் கொள்ள பரிந்துரைப்பது தவறில்லை, தவிர்க்கச் சொல்வது தவறில்லையா??? //
    Where have to advised to avoid Carbohydrates
    Please specify
    குறைமாவு உணவு உட்கொள்ளும் போது என்ன நடக்கிறது

    சாப்பிடும் உணவில் மாவுச்சத்து இல்லை என்றாலோ, அல்லது மாவுச்சத்து குறைவாக இருந்தாலோ,

    கொழுப்பு குறையும் என்று உங்கள் பதிவில் தான் குறிப்பிட்டுள்ளீர்கள்…

    1. //குறைமாவு உணவு உட்கொள்ளும் போது என்ன நடக்கிறது
     சாப்பிடும் உணவில் மாவுச்சத்து இல்லை என்றாலோ, அல்லது மாவுச்சத்து குறைவாக இருந்தாலோ,
     கொழுப்பு குறையும் என்று உங்கள் பதிவில் தான் குறிப்பிட்டுள்ளீர்கள்…//

     YES
     I have mentioned this
     But
     Where have to advised to avoid Carbohydrates
     Please specify

   3. //அனைத்து சத்துக்களும், அனைத்து வகையான உணவுகளும், அதாவது சரிவிகித உணவு என்பது தேவையற்றதா??? //
    //A balanced diet for a person with more insulin receptors in adipose tissue is different from the balanced diet for one with less receptors//
    Is it advised only to the person who have less insulin receptors???

 5. // இப்படியாக இன்சுலின் சுரப்பது குறைந்தால் வருங்காலத்தின் கணையம் இன்சுலின் சுரப்பதை மறக்க வாய்ப்புள்ளதா ?

  எனவே, இது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம் //

  Hi Bruno, I paused our Fb conversation to finish my book. Back to your writing. Nice and basics Info’s are right but you didn’t answered your initial question i quoted above. Cheers for your lucid style of explanation. But i don’t accept work of insulin as sugar regulation in blood. Agriculture started 2000 yes is so bad for a guy who read Thirukkural which said… How to plough … Pidi eruvum illaathu saalapadum!!

 6. Dr

  “இரத்தத்தில் குளுக்கோசை அதிகரிக்கும் இயக்குநீர்கள் தான் உடலில் அதிகம்”

  why the blood sugar level is reduced and leads to homo state if more harmones are available to increase the blood sugar level

Comments are closed.