மாவு சத்து, கொழுப்பு சத்து இரண்டையுமே குறைத்து சாப்பிட்டால் என்ன ?

மாவு சத்து, கொழுப்பு சத்து இரண்டையுமே குறைத்து சாப்பிட்டால் என்ன ?

The English Version of this article can be found at Why More Fat is Needed in Paleo Diet ? Why you should not Reduce Fat Intake ?

 • மாவு சத்து, கொழுப்பு சத்து இரண்டையுமே குறைத்து சாப்பிட்டால் என்ன ?
 • ஏன் மாவுச்சத்தை மட்டுமே குறைக்க வேண்டும் ?
 • ஏன் கொழுப்பை குறைக்க நீங்கள் கூறுவதில்லை ?

ஆகிய கேள்விகளை அடிக்கடி கேட்கிறோம் . . .

இதற்கான விடை எளிது

-oOo-

உடல் இயங்குவதற்கு சக்தி தேவை

இந்த சக்தியானது மாவுச்சத்திலிருந்தும் பெறப்படலாம், கொழுப்பு சத்திலிருந்தும் பெறப்படலாம்
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் இருந்து சக்தி பெறப்படவேண்டும் இவை இரண்டுமே உணவில் இல்லை என்றால், உடலில் இருக்கும் புரதங்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்து சக்தி பெறப்படும். அந்த நிலைக்கு பெயர் பசி, பட்டினி . . . ஆங்கிலத்தில் Starvation . . .

-oOo-

உடல் இயங்குவதற்கு தேவையான சக்தியானது மாவுச்சத்திலிருந்தும் பெறப்படலாம், கொழுப்பு சத்திலிருந்தும் பெறப்படலாம் . . ஏன் மாவுச்சத்திலிருந்து பெறாமல் கொழுப்பில் இருந்து பெற வேண்டும் ?

இதற்கான விடையும் எளிது தான் . .

நாம் உணவும் உணவில் இருக்கும் சக்தியானது,

 1. செலவழிக்கப்படுகிறது
 2. கொழுப்பாக சேமிக்கப்படுகிறது

இதில் சில விசித்திரங்கள் இயற்கையின் படைப்பில் உள்ளன
நாம் உண்ணும் உணவும் இருக்கும் மாவுச்சத்தும் சரி, கொழுப்பு சத்தும் சரி, அது கொழுப்பாகவே சேமிக்கப்படுகிறது.
ஆனால்

நமது உணவில் இருக்கும் சக்தியில் எத்தனை சதவீதம் சேமிக்கப்படவேண்டும், எத்தனை சதவீதம் செலவழிக்கப்படவேண்டும் என்று தீர்மாணிப்பது எது தெரியுமா ?
நமது உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் இதை தீர்மானிக்கிறது

அதாவது
நமது உடம்பில் எந்த அளவு கொழுப்பு இருக்க வேண்டும் என்பதை நமது உணவில் இருக்கும் மாவுச்சத்து தீர்மாணிக்கிறது. இது தான் இயற்கையின் நியதி. 

மீண்டும் கூறுகிறேன் . . உங்கள் வயிற்றில், உங்கள் இரத்தக்குழாயினுள் எவ்வளவு கொழுப்பு இருக்க வேண்டும் என்பதை தீர்மாணிப்பது நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கொழுப்பு அல்ல, நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச்சத்தை இதை தீர்மானிக்கிறது 

எனவே

 • நீங்கள் வெறும் மாவுச்சத்து மட்டும் உண்டு, கொழுப்பு குறைவாக உண்டாலும், உங்கள் உணவின் பெரும்பகுதி சேமிக்கப்படும். அதுவும் கொழுப்பாகவே சேமிக்கப்படும்
 • நீங்கள் மாவுச்சத்தும் உண்டு, கொழுப்பும் உண்டாலும், உங்கள் உணவின் பெரும்பகுதி சேமிக்கப்படும். அதுவும் கொழுப்பாகவே சேமிக்கப்படும்
 • நீங்கள் மாவுச்சத்து குறைவாக உண்டு, கொழுப்பு அதிகம் உண்டால், வெகு குறைவாகவே சேமிக்கப்படும் (இது தான் பேலியோ உணவு முறையில் அல்லது அனைத்து குறைமாவு நிறைகொழுப்பு உணவு முறைகளிலும் நடக்கிறது)
 • நீங்கள் மாவுச்சத்து குறைவாக உண்டு, கொழுப்பும் குறைவாக உண்டால்,  உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியில்லாமல் உறுப்புகள் செயலிழக்கின்றன. இது உயிருக்கு ஆபத்தான நிலை. பசி, பட்டினி, பஞ்சத்தில் மரணம் ஏற்படுவது இப்படித்தான்இதனால் தான் மாவுச்சத்தினை குறைத்து கொழுப்பு சத்தினை அதிகம் உண்ண கூறுகிறோம்

-oOo-

Low Carb High Carb Low Fat High Fat Obesity Starvation Paleo
Low Carb High Carb Low Fat High Fat Obesity Starvation Paleo

-oOo-

உடல்பருமன், பசி, பேலியோ
உடல்பருமன், பசி, பேலியோ

-oOo-

Paleo, Starvation, Well Fed, High Carb, Low Carb, High Fat, Low Fat
Paleo, Starvation, Well Fed, High Carb, Low Carb, High Fat, Low Fat

11 thoughts on “மாவு சத்து, கொழுப்பு சத்து இரண்டையுமே குறைத்து சாப்பிட்டால் என்ன ?”

 1. மிகத்தெளிவான விளக்கம். நன்றி டாக்டர்

 2. Sir for the sake of easy cooking and affordability can I try eggs all three times at 61years with diabetes on metformin atorvastatin and clopidegral on cardiologist advice if possible please reply in my personal page

 3. Thanks for the valuable info doctor. My doubt is if we are obese and have excess stored fat, still should we have more fat and less carbs or should we have less fat and carbs till we reach normal weight.

Comments are closed.